நாகினி போய் நந்தினியா? பாடாய் படுத்தும் பாம்பு மோகம்!
திரையரங்கு போய் படம் பார்ப்பவர்களை விட வீட்டில் சீரியல் பார்ப்பவர்கள் தான் அதிகம்.
தொலைக்காட்சிகளில் எத்தனை புதுப்படம், ரியாலிட்டி ஷோ போட்டாலும் டிஆர்பி என்னவோ சீரியலுக்குத்தான் அதிகம்.
சமீபகாலமாக மாமியார், மருமகள் பழிவாங்கும் கதைகளை விட பாம்பும், பேயும் பழிவாங்கும் கதைகள் தான் அதிகமாக வரத்தொடங்கிவிட்டன.
அதிலும் நாகினி சீரியல் இளைஞர்களையும் கவர்ந்திழுக்க தொடங்கியதும் தற்போது அந்த சீரியல் முடிந்ததை தொடர்ந்து நந்தினி என அடுத்த பாம்பு சீரியல் வரத்தொடங்கிவிட்டது.
இதில் விஜயகுமார், நித்யாராம், மாளவிகா, காயத்ரி ஜெயராம், சச்சு, சிங்கம்புலி என தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகங்கள் வேறு நடிக்கிறார்கள்.
அரண்மனை 1, 2 என பேய் படங்களில் கலக்கிவரும் சுந்தர்.சி தான் முழுக்கதையும் தயார் செய்துள்ளார், தயாரிப்பாளரும் இவர் தான். டைட்டில் பாடலை ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
பாம்பு பழிவாங்கும் வழக்கமான கதைதான் என்றாலும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது.
N5




