செய்திகள்

நாட்டறம்பள்ளி அருகே கார் கவிழ்ந்து நடிகை பலி, 3 பேர் படுகாயம்

பெங்களூருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகள் ரேகா சிந்து (வயது 22). பெங்களூருரில் டி.வி. துணை நடிகையாக நடித்து வந்தார். டி.வி. நடிகர், நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும், விளம்பர மாடலாகவும் இருந்தார்.
தற்போது தமிழில் ‘ருத்ரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். படம் இன்னும் வெளியாகவில்லை. இவர், சென்னையில் சூட்டிங்கிற்கு சென்று விட்டு நேற்றிரவு காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டார். நடிகை ரேகா சிந்துவுடன், பெங்களூருவை சேர்ந்த அவரது தோழி ரட்சினி (21) மற்றும் ஜெயக்குமரன் (20) ஆகிய 2 பேரும் பயணித்தனர்.
காரை, டிரைவர் அபிஷேக் குமரன் (22) என்பவர் ஓட்டினார். இன்று அதிகாலை 1 மணியளவில் வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி சுண்ணாம்பு குட்டை என்ற பகுதியை கடந்து சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் அதிவேகமாக சென்றுக் கொண்டிருந்தது.(15)05-1493971677-rekhasindh56656