நாட்டாமை படத்தில் மிக்சர் சாப்பிடுபவர் யார் தெரியுமா
ஜல்லிக்கட்டு பிரச்சனை இப்போது பெரிதாக வெடித்திருக்கிறது. எங்கு பார்த்தாலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஜல்லிக்கட்டு ஒன்றையே உச்சரித்து வருகின்றனர்.
இதனிடையில் பிரபலம் ஒருவர் ஜல்லிக்கட்டு தொடர்பாக எதுவும் செய்யாமல் மிக்சர் சாப்பிடுவது போன்ற மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.
நாட்டாமை படத்தில் வந்த மிக்சர் சாப்பிடும் காட்சி வைத்துதான் மீம்ஸ்கள் வருகின்றன.
இந்த காட்சி குறித்து நாட்டாமை பட இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் கூறுகையில், பெண் பார்க்கும் காட்சியில் எதுவுமே கூறாமல் தன்பாட்டுக்கு மிக்சர் சாப்பிட்டவர் லைட்மேனாம்.
படப்பிடிப்பிலும் எதுவும் பேசாமல் வேலை பார்ப்பாராம். முதலில் நடிக்கத் தயங்கியவர் எதுவும் பேசத் தேவையில்லை மிக்சர் மட்டும் சாப்பிட்டால் போதும் என்று கூறியதும் சந்தோஷமாக நடித்தாராம்.
N5




