செய்திகள்

நாட்டின் அபிவிருத்திக்கு சிறந்த வரவு செலவு : ஶ்ரீ.ல.சு.க

2017 வரவு செலவு திட்டத்தில் அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் உள்ளதால் கடந்த முறையை விட சிறந்தது என்பதுடன் எங்களது யோசனைகளும் உள்ளடங்கப்பட்டுள்ளது என ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
பல்வேறு தரப்பினரின் யோசனைகளின் அடிப்படையிலேயே இம்முறை வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன் தொடர்பான விடயங்கள் இல்லாவிட்டாலும் நாட்டின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் உள்ளன. இதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். என அந்தக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். -(3)