சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம்
நாட்டின் பல பாகங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்பதால், பொது மக்கள் அவதானமாக இருக்கும்படி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் சில தினங்களுக்கு மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 75 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சி காணப்படும் என்பதோடு கரையோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேலும் அனுராதபுரம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடும் மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலபாத்த, குருவிட்ட பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் களு கங்கைக்கு அண்மையில் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டின் சப்ரகமுவ,மத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருதால் ஆற்றங்கரையோரங்களை அண்டி வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும் அவதானமாகவும் இருக்கும்படியும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.(15)




