நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு வீதிகளும் முக்கியமான ஒரு பங்களிப்பை வகிக்கின்றது
தோட்ட கிராமபுர வீதிகள் புனரமைப்புக்காக நல்லாட்சி அரசாங்கத்தின் துரித கதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உள்ளிட்ட நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நெடுஞ்சாலை அமைச்சர் லக்ஷமன் கிரிஎல்ல ஆகியோரின் பணிப்புரையின் கீழ் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு பொது வசதிகள் அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோருக்கு முழு பொறப்புகளும் வழங்கப்பட்டு தோட்ட பாதைகள் புனரமைப்பு வேலைகளை முன்னெடுக்க அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மஸ்கெலியா நல்லதண்ணி வலதல மறே பாதை செப்பனிடுவதற்கு 21.02.2016 அன்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இந்த வைபவத்தில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், ஆர்.இராஜாராம், முன்னால் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் நகுலேஸ்வரன் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த வைபத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு வீதிகளும் முக்கியமான ஒரு பங்களிப்பை வகிக்கின்றது. இந்தவகையில் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னோடிகளாக திகழ்கின்றனர்.
இவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் காணப்படுகின்ற பிரதான வீதிகள் பாவனைக்குதவாததாக இருக்கின்றது. இந்தநிலையில் நல்லாட்சி அரசாங்கம் இவ்வீதிகளை புனரமைப்பு செய்வதற்காக நல்ல வாய்ப்புகளை எமக்கு அளித்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் பாரிய அங்கத்துவத்தை வகிக்கும் மலையக கட்சிகளாக தமிழ் முற்போக்கு கூட்டணி திகழ்கின்றது. எனவே மக்களின் வாக்கு பலத்தால் அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அரசாங்கம் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றது.
இந்த வகையில் கல்வி இராஜாங்க அமைச்சரான எனக்கும் அமைச்சர் திகாம்பரத்திற்கும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமங்சிங்கவின் ஊடாகவும் அமைச்சர் லக்ஷமன் கிரிஎல்ல அவரின் அமைச்சின் ஊடாகவும் மலையகத்தில் பின்தள்ளப்பட்டிருக்கும் பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படுகின்ற மக்களுக்கு உதவாத வீதிகளை இனங்கண்டு அதனை மக்கள் பாவனைக்காக புனரமைப்பு செய்து நல்ல அபிவிருத்தி சூழலை முன்னெடுக்க நாம் இன்று இறங்கியுள்ளோம்.
இந்தவகையில் மக்களுடைய புகார்களுக்கு இணங்க காணப்படுகின்ற அனைத்து வீதிகளும் தக்க சமயத்தில் புனரமைப்பு பணிகள் ஊடாக அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் என தனது உரையில் மேலும் தெரிவித்தார்.
n10







