செய்திகள்

நாட்டில் அவசர கால நிலைமையை பிரகடனப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை

நாட்டில் மாவட்டங்கள் பலவற்றில் நிலவும் வறட்சியான காலநிலையை கருத்திற்கொண்டு அந்த மாவட்டங்களில் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்துமாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அரசாங்கத்திற் கோரிக்கை விடுத்துள்ளது.
வறட்சி காரணமாக அந்த மாவட்டங்களில் மக்களுக்கு குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவர்களுக்கு நிவரணமளிக்கும் வகையில் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். -(3)