செய்திகள்

நாட்டில் இன்று மழையுடன் கூடிய கால நிலை நிலவும்

வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக நாட்டில் பல பாகங்களில் இன்றைய தினம் மழையுடன் கூடிய கால நிலை நிலவலாம் என வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் வேளையில் வட மத்திய , கிழக்கு மற்றும் ஊவா உள்ளிட்ட மாகாணங்கள் பலவற்றில் மழையுடன் கூடிய கால நிலை நிலவலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இடி மின்னல் மற்றும் கடுங் காற்றும் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.