நாட்டில் சதுர முனை மின் பிளக்குகள் மாத்திரமே பாவனைக்கு வரும் : வட்ட துளை பிளக்குகளுக்கு 2018இன் பின் தடை
தற்போது நாட்டில் பெரும்பாலும் பாவனையிலுள்ள வட்ட முனையிலான செறுகிகளை (Plugs & Sockets) தடை செய்யவும் சதுர முனையினை கொண்ட செறுகிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானத்தின்படி 2018 ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் தற்போது பாவனையிலுள்ள வட்ட முனையிலான செறுகிகளின் உற்பத்திகள் , இறக்குமதிகள் மற்றும் விற்பனைகள் தடைசெய்யப்படவுள்ளது.
நாட்டில் பொதுவான மற்றும் தரமான செறுகிகளை பயன்படுத்துவதினூடாக மின்சாரத்தினால் ஏற்படும் விபத்துக்களை தவிர்த்துக்கொள்ள முடியுமென பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் எவ்வாறாயினும் தற்போது வீடுகளில் பயன்பாட்டிலுள்ள செறுகிகளை மாற்றலாம். அல்லது அவ்வாறே விடலாம். ஆனால் அது பழுதடைந்த பின்னர் புதிய செறுகிகளை பொறுத்தும் போது சதுரமுனை செறுகிகளே பொறுத்த வேண்டும் என்பதுடன் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுத் சகல இலத்திரனியல் பொருட்களினதும் செறுகிகளையும் அதற்கு ஏற்றால் போல் அமைப்பதற்கும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. -(3)




