நாட்டுக்கு விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது : கம்மன்பில
தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் வடக்கிலிருந்து இராணுவத்தை குறைக்க கூடாது எனவும் பிவித்துறு ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளால் தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றால் முன்னாள் ஜனாதிபதிக்கு எந்தளவு அச்சுறுத்தல் இருக்கும் என்பதனை மக்களுக்கு புரிந்துகொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)




