”நாட்டு மக்களுக்கு கிடைத்த வெற்றியே” : ஜீ.எஸ்.பி சலுகை தொடர்பாக ரணில்
ஜி.எஸ்.பி.வரிச் சலுகையை பெற்றுக் கொள்ள முடிந்தமை முழு இலங்கை மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது மக்கள் உரிமை உள்ளிட்ட விடயங்களைப் பாதுகாத்து இலங்கையில் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொண்ட அர்ப்பணிப்பின் பெறுபேறாகும்.
இது நல்லாட்சி அரசாங்கத்தின் வெற்றி மாத்திரமல்ல. இதன் பெறுபேறு அனைத்து நாட்டு மக்களுக்கும் உரித்தானதாகும். ஆடைத்தொழில்துறை உள்ளிட்ட தேசிய தயாரிப்புகக்களை முழு அளவில் ஐரோப்பிய வர்த்தக சந்தையில் மீண்டும் முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. புதிய தொழில்வாய்ப்புக்கான சந்தர்ப்பங்கள் நாட்டில் ஏற்படும். நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் ஜி.எஸ்.பி.வரிச்சலுகை வழி வகை செய்யும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். -(3)




