செய்திகள்

நாட்டையும் இராணுவத்தையும் அரசாங்கம் காட்டிக்கொடுத்துவிட்டது: போராடத் தயாராகுமாறு மகிந்த மக்களுக்கு அழைப்பு

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியில் ஒரு பகு­தி­யினர் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து நாட்டை காட்­டிக்­கொ­டுத்­துள்­ள­னர். இது வேத­னைக்­கு­ரிய நிலை­யாகும். எவ்­வா­றா­யினும் நாட்­டையும் இரா­ணு­வத்­தையும் காட்­டிக்­கொ­டுக்கும் இந்த அர­சாங்­கத்­திற்கு எதி­ராக போராட அனைத்து மக்­களும் எம்முடன் ஒன்­றி­ணைய வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அழைப்பு விடுத்­துள்ளார்.

யுத்­தத்­திற்கு அனைத்து வகை­யிலும் இடை­யூறு ஏற்­ப­டுத்திய ஐக்­கிய தேசியக் கட்சி எமது கட்­சியை அடி­மைப்­ப­டுத்­தி­யுள்­ளமை தொடர்பில் கவலை அடை­கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நேற்று வெளியிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­தி­ருந்தார். அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

2015 ஆம் ஆண்டில் இலங்­கைக்கு எதி­ராக நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை அமுல்­ப­டுத்­து­வ­தாக நாட்­டிற்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் ஆணை­யா­ள­ரிடம் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் ஆகியோர் உறு­தி­ய­ளித்­துள்­ளனர். அந்த தீர்­மா­னத்தின் விஷேடம் என்­ன­வென்றால் அதனை இலங்கை அர­சாங்­கத்­தி­ன­தாக ஏற்றுக் கொண்டு மனித உரி­மைகள் பேர­வையில் வாக்­கெ­டுப்­பின்றி நிறை­வேற்றிக் கொண்­ட­மை­யாகும்.

ஐக்­கிய தேசிய கட்சி தலை­மை­யி­லான அர­சாங்கம் இலங்­கைக்கு எதி­ரான இந்த தீர்­மானம் தொடர்பில் செயற்­பட்ட வித­மா­னது 2002 ஆம் ஆண்டில் போர் நிறுத்­தத்­திற்­காக செயற்­பட்­டதை போன்றே காணப்படுகிறது. இந்த தீர்­மானத்தை நிறை­வேற்­று­வ­தற்கு முன்னர் அதனை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு ஜெனி­வாவில் உள்ள இலங்கை பிர­தி­நிதி செயற்­பட்ட போதிலும் அதற்கு தடை ஏற்­ப­டுத்தி அமெ­ரிக்­காவின் தயா­ரிப்பின் பிர­கா­ரமே நிறை­வேற்றிக் கொள்­வ­தற்கு அர­சாங்கம் செயற்­பட்­டது. இலங்­கைக்கு எதி­ரான அமெ­ரிக்­காவின் இந்த தீர்­மா­னத்தில் எவ்­வித மாற்­றமும் செய்­யாது நிறை­வேற்றி கொண்டு அதனை பாரிய இரா­ஜ­தந்­திர வெற்­றி­யாக மக்­க­ளுக்கு காண்­பிக்க முற்­பட்­டாலும் , 1815 ஆண்டில் உட­ரட்ட ஒப்­பந்­தத்தை போன்று நாட்டை காட்­டிக்­கொ­டுத்த ஒன்­றா­கவே அமைந்­தது.

ஜெனிவா தீர்­மா­னத்தின் ஊடாக அர­சாங்கம் நிறை­வேற்ற உள்ள விட­யங்கள் தொடர்பில் மக்­களை தெளிவுப்­ப­டுத்த வேண்­டி­ய­துள்­ளது. இந்த தீர்­மா­னத்தின் 1,4,6,7,8 மற்றும் 12 ஆகிய பிரி­வு­களின் பிர­காரம் தமிழ் மக்­களை கொலை செய்­தமை , அவர்­களை சித்­தி­ர­வதை செய்­தமை மற்றும் வடக்கில் திட்­ட­மிட்டு உணவு தட்­டுப்­பாட்டை ஏற்­ப­டுத்­தி­யமை உள்­ளிட்ட போர் குற்­றங்கள் புரிந்­துள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் அலு­வ­ல­கத்­தினால் வெளி

யி­டப்­பட்ட பக்­கச்­சார்­பான அறிக்­கையை முழு­மை­யாக ஏற்றுக் கொண்­டுள்­ள­னர். அந்த போர் குற்­றங்­களை விசா­ரணை செய்­வ­தற்கு நீதி மன்றம் அமைத்தல் அதற்கு சர்­வ­தேச நிதி உத­வியை பெற்றுக் கொள்­வ­தற்கும் அர­சாங்கம் இணக்கம் தெரி­வித்­துள்­ளது.

அது மாத்­திரமன்றி போர் குற்றம் புரிந்­துள்­ள­தாக சந்­தே­கிக்­கப்­படும் இரா­ணுவ உறுப்­பி­னர்­களை போர் குற்ற நீதி மன்­றத்­திற்கு அழைப்­ப­தற்கு போதிய சாட்சி இல்­லாத நிலை­யிலும் அவர்களை இரா­ணு­வத்தில் இருந்து நீக்­கு­வ­தற்கும் அர­சாங்கம் இணக்கம் தெரி­வித்­துள்­ளது. அதே போன்று சிவில் பாது­காப்பு சட்­டத்தை மறு­சீ­ர­மைக்­கவும் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை இரத்து செய்­யவும் அர­சாங்கம் விருப்­பத்தை வெளியிட்­டுள்­ளது.

ஜெனிவா தீர்­மா­னத்தின் 16,18, மற்றும் 20 ஆகிய பிரி­வு­களின் பிர­காரம் இலங்­கையின் அர­சியல் பிரச்­சினைக்கு தீர்வு வழங்­கு­வ­தற்­காக அதி­கா­ரத்தை பகி­ரவும் அதனை ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் அலு­வ­ல­கத்தின் மேற்­பார்­வையில் முன்­னெ­டுக்­கவும் அர­சாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் அலு­வ­லகம் என்­பது ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் விமர்­ச­னத்­திற்கு உள்­ளான ஒன்­றாகும். மேற்­கு­லக சக்­தி­களின் நிதியில் தங்கி இருப்­ப­த­ாக கூறி அதனை மாற்­றி­ய­மைக்க ஒவ்­வொரு வரு­டமும் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் அலு­வ­ல­கத்­திற்கு எதி­ராக தீர்­மானம் நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றது. இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லை­யி­லேயே இலங்­கைக்கு எதி­ராக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளது என்­பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஜெனிவா தீர்­மா­னத்தை ஏற்றுக் கொண்­டதன் ஊடாக நாட்­டிற்கு எவ்­வி­த­மான பாதிப்பும் இல்லை என மக்­க­ளுக்கு காண்­பிக்க அர­சாங்கம் பல முயற்­சி­களை எடுத்து வரு­கின்­றது . போர் குற்ற விசா­ரணை பொறி­முறை தொடர்பில் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் கடந்த நாட்­களில் சர்­வ­தேச ஊட­கங்­க­ளுக்கு பரஸ்­பர கருத்­துக்­களை கூறி­யதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. ஆனால் ஜனா­தி­ப­தியின் சுதந்­திர தின உரையில் ஜெனீவா தீர்­மானம் தொடர்பில் பிர­த­ம­ருக்கும் ஜனா­தி­ப­திக்கும் இடையில் கருத்து முரண்­பாடு உண்­மை­யா­கவே இல்லை என்­பது வெ ளிப்­ப­டு­கின்­றது. நாட்டின் ஜன­நா­யகம் , நல்­லி­ணக்கம் மற்றும் இரா­ணு­வத்­திற்­கான கௌரவம் ஜெனீவா தீர்­மா­னத்தை செயற்­ப­டுத்­து­வதன் ஊடாக வளர்ச்சி அடையும் என ஜன­தி­பதி தனது சுதந்­திர தின உரையில் கூறி­யி­ருந்தார்.

அதன் பின்னர் பெப்­ர­வரி 6 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ஊடக சந்­திப்பின் போது ஜெனிவா தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்த ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மற்றும் ஐக்­கிய தேசிய கட்சி இணக்­கப்­பாடு ஏற்­பட்­டுள்­ள­தாக உத்­தி­யோ­கப்­புர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆங்­கல பத்­தி­ரியை ஒன்றில் செய்தி வெளியா­னது. யுத்த வெற்­றிக்கு எனது தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் அர­சாங்மே காரணமாகும். யுத்­தத்­திற்கு அனைத்து வகை­யிலும் இடை­யுறு ஏற்­ப­டுத்திய ஐக்­கிய தேசிய கட்சி எமது கட்­சியை அடி­மைப்­ப­டுத்­தி­யுள்­ளமை தொடர்பில் கவலை அடை­கின்றேன். 2007 ஆம் ஆண்­டில வரவு செலவு திட்டத்தை தோல்வியடைய செய்து அரசாங்கத்தை கவிழ்த்து போரை நிறுத்த ஐக்கிய தேசிய கட்சி எடுத்த முயற்சியை யாரும் மறந்து விட முடியாது. இந்நிலையில் இவர்களின் இன்றைய செயற்பாடுகளை கண்டு நான் ஆச்சரியப்பட போவதில்ல்ைை

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு பகுதியினர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நாட்டை காட்டிக்கொடுக்கின்றமையை நினைத்து வேதனையடைகின்றேன். நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கம் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும்.
R-06