செய்திகள்

நாட்டை விட்டு வெளியேறுகின்றாரா மைத்திரி?

தான் தென்கொரியாவில் வசிக்கப் போவதாக தெரிவித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் பொய்யானவை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவுக்கோ அல்லது உலகின் வேறு எந்த நாடுகளுக்கோ தான் செல்ல விரும்பவில்லை என முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசியல் எதிரிகளால் வெளியிடப்படும் இவ்வாறான பொய்யான அறிக்கைகளை வன்மையாக நிராகரிப்பதாக அவர் குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

-(3)