நானாக வெளியேறவில்லை, மணி சார் தான் அனுப்பிவிட்டார் : சாய் பல்லவி
‘கடலோரக் கவிதைகள், காக்க காக்க’ என்ற இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு டீசர் என்ற கதாபாத்திரம் பேசப்பட்டதென்றால் அது நம் மலர் டீச்சரிடம் தான். மலர் டீச்சர் யார் என்று தமிழ் படம் மட்டும் பார்ககும் ரசிகர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் மலர் டீச்சர் மலையாளத்திற்கு உரியவர்.
‘ப்ரேமம்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி, இளைஞர்களை எல்லாம் ஈர்த்தவர் தான் சாய் பல்லவி. அந்த அளவிற்கு மலர் கதாபாத்திரத்தின் மூலம் நம்மை கவர்ந்தவர் சாய் பல்லவி. இவர் அடுத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்பட்டது.
ஆனால், இவர் இந்த படத்திலிருந்து விலகியதாக ஒரு வதந்தி வெளிவந்தது. இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில் ‘மணிரத்னம் சார் படத்தில் யாராவது நடிக்க மாட்டேன் என கூறுவார்களா? அவருக்கு இன்னும் கொஞ்சம் வயது அதிகமான நடிகை தேவைப்பட்டார், அதனால், தான் என்னால் நடிக்க முடியவில்லை, இதற்கு மேல் நான் என்ன செய்வது, மற்றப்படி நானாக தான் அந்த படத்திலிருந்து வெளியேறவில்லை’ என வருத்தத்துடன் கூறியுள்ளார்.
N5




