செய்திகள்

நான்காவது முறையாக ஆந்திரா முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு!

ஆந்திராவின் முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்.

175 தொகுதிகளை கொண்ட ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது.

இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக சந்திரபாபு நாயுடு தெரிவுசெய்யப்பட்டார்.

இதனையடுத்த சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக நான்காவது முறையாக இன்று காலை 11.27 மணிக்கு விஜயவாடாவில் பதவியேற்றார்.

மேலும் துணை முதலமைச்சராக பவன் கல்யாண் பதவியேற்றார். இவர்கள் தவிர மேலும் 26 அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நடிகர் ரஜினிகாந்த ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
-(3)