செய்திகள்

நான் அரசாங்கத்திற்கு எதிரான இன்றைய கூட்டத்தில் நிச்சயம் கலந்துக்கொள்வேன் : மஹிந்த

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இன்று கொழும்பில் நடத்தப்படவுள்ள பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் நிச்சயமாக தான் கலந்துக்கொள்வேன் எனவும் தான் கலந்துக்கொள்ள மாட்டேன் என வெளியாகும் செய்திகளை நம்பவேண்டாமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தினூடாகவே மஹிந்த ராஜபக்‌ஷ இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்குமென கட்சியினரால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக என்ன செய்வார்கள் என கூட்டத்திற்கு போய் வந்த பின்னர் பார்ப்போம் என நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மஹிந்த தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
n10