செய்திகள்

நான் எனது எல்லைக்குள் நிற்கிறேன் – சாய்பல்லவி

பிரேமம்’ படத்தில் நடித்து பிரபலமானவர் சாய்பல்லவி. தமிழ் தெலுங்கில் தற்போது ‘பிசி’யாக நடித்து வருகிறார். தெலுங்கில் ‘பிடா’, ‘எம்.சி.ஏ’ படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சர்வானந்தாவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடைய சம்பளம் ஒன்றரை கோடி என்று செய்திகள் வெளியாகின.

தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் சாய்பல்லவி நடித்துள்ள ‘கரு’ படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது. இதில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருக்கிறார். இதையடுத்து, சூர்யாவுடன் ‘என்ஜிகே’, தனுசுடன் ‘மாரி-2’ படங்களில் நடிக்கிறார்.

சாய் பல்லவி தனக்கு பொருந்தாத வேடங்களில் நடிக்க ஒப்புக்கொள்வது இல்லை. திரைத்துறையில் தனக்கு என்று ஒரு பாணியை கடை பிடிக்கிறார். இதனால் இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் சாய்பல்லவி அளித்த பேட்டி,“சினிமாவில் எந்த நடிகையையும் நான் போட்டியாக நினைக்கவில்லை. என்னுடைய பலம், பலவீனம் என்ன என்பது எனக்குத் தெரியும். எல்லா விதமான வேடங்களுக்கும் நான் பொருந்தமாட்டேன். எனவே, எனது எல்லைக்குள் நின்று நடித்து வருகிறேன்”. (15)7b0049cdc62ac208beb03d564a7dc2c5