செய்திகள்
நான் கட்சியை அமைக்கப் போவதில்லை : மக்களே அமைப்பார்கள் என்கிறார் மகிந்த
நான் புதிய கட்சியை அமைக்கப் போவதில்லை. ஆனால் மக்கள் அந்தக் கட்சியை அமைப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று யட்டிநுவர பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
8ஆம் திகதி இரத்தினப்புரியில் நடைபெறவுள்ள கூட்டம் பொது மக்களின் மேடையே நான் புதிய கட்சியை அமைக்க மாட்டேன். ஆனால் மக்கள் அமைக்கவேண்டுமென்ற நோக்கத்தில் இருக்கின்றார்கள் அதன்படி அவர்கள் கட்சியை அமைப்பார்கள். என அவர் தெரிவித்துள்ளார்.-(3)




