நான் நீதிமன்றத்தை அச்சுறுத்தவில்லை என்கிறார் வீரசேகர!
நீதிமன்றத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் வைத்துதான் கருத்து வெளியிட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தான் நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர சட்டத்தரணிகள் சங்கத்திற்கு கடிதமொன்றை அனுப்பி தெரிவித்துள்ளார்.
குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது சரத் வீரசேகர வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையொன்றுக்கு பதிலளிக்கும் வகையிலேயே சரத் வீரசேகர இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பாராளுமன்றத்திற்குள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதனை தான் நன்கு அறிந்துள்ளதாகவும், இதனால் தான் அவ்வாறாக அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்துகொள்ளவில்லை என்று அவர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-(3)




