நாமலுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தின் அறிவிப்பு!
நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கை, ஜூன் மாதம் வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதாகக் கூறி, இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்று நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டி, சட்டமா அதிபரால் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று(21) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதி கோரிய சில ஆவணங்கள் இன்று திறந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசு தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.




