நாமலுடன் கருத்து மோதல்: அமெரிக்கா பறந்தார் பஸில்!
பசில் ராஜபக்ஷவை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் திட்டத்திற்கு நாமல் ராஜபக்ஷ அணியினர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் நாமல் ராஜபக்ஷவுக்கும் பசில் ராபக்ஷவுக்கும் இடையே கருத்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இன்று அதிகாலை பசில் ராஜபக்ஷ தனது மனைவியுடன் அமெரிக்கா பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு வாரங்களில் அவர் நாடு திரும்புவதாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதும், பொதுஜன பெரமுனவுக்குள் ஏற்பட்ட கருத்து மோதலை தொடர்ந்து அவர் நாடு திரும்பும் தினத்தை பிற்போட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
-(3)




