செய்திகள்

நாமல் விளக்கமறியலில்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான இவர் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டார்.

றக்பி விளையாட்டு வளர்ச்சிக்காக கிரிஷ் குழுவிடம் இருந்து பெற்றுக்கொண்ட 70 மில்லியன் ரூபாய் நிதியினை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே நாமல் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை இம்மாதம் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

n10