செய்திகள்

நாம் ஒரு தேசிய இனமாக இருந்து கொண்டு போராட்ட களத்தை சந்திக்க வேண்டியதன் தேவை!

திரு திருச்சோதி

இன்றைய உலகமயப்படுத்தலில் தேசிய இனங்களாக இருந்த எங்களை ஒரு குறுகிய சிறுபான்மையினராக மாற்றி  வல்லரசுகள் தமது ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இந்த உலகமயதாக்குதல், அல்லது வல்லரசுகள் தமது ஆளுமைகளை ஏனைய நாடுகள் அல்லது உலகத்தில் வாழும் தேசிய இனங்களை பல வேற்று இனங்களுடன் ஒன்று சேர்ப்பது போன்ற செயல் திட்ட வரைவுகள்  இன்று ஆரம்பித்தது அல்ல. காலனித்துவ காலத்தில் இருந்து இந்த சிந்தனைகள் செயல்வடிவங்கள் கொடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.

அந்த திட்டத்தில் அழிந்த மக்கள் – இனங்கள் எத்தனையோ- இதற்கு எதிராக போராடிய இன மக்கள் பல காலகட்டங்களில் அவர்களின் போராட்டங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டும் இருக்கிறது. நைஜீரிய வில் இக்போ இனமக்கள் பியப்பிர என்ற நாட்டை உருவாக்கி வாழ அதை ஒரு பாரிய இனப்படுகொலைக்கூடாக அவர்கள் இனம் அழிக்கப்பட்டது அவர்களது போராட்டம் அழிக்கப்பட்டு இன்று மறக்கப்பட்ட  இனமாக,  அவர்கள் அடையாளங்கள் அழிக்கப்பட்டு  வாழ்கிறார்கள்.

Igpo people

அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு அழிக்கப்பட்ட இக்போ இனமக்கள்

இன்று இந்த உலகமயமாக்களில் முகம் கொடுத்து தமது போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள் குர்திஸ்தான் இன மக்கள், பாலஸ்தீன மக்கள் மற்றும் தமிழ் மக்கள்.

அதில் தமிழ் மக்களின் போராட்டத்தை மனிதவுரிமை, பொருளாதாரம் என்ற வரையறைக்குள் கட்டி வைத்து ஜெனீவா மனிதவுரிமை சபையில் எமது வலுவையெல்லாம் முடக்கி எம்மை மாற்று சிந்தனைக்குள் போகாமல் கட்டி போட்டு வைத்திருக்கிறது இந்த சர்வதேசம், மற்றும் அவர்களின் ஆலோசனையில் செயல்படும் நாடுகள், அதில் சிறி லங்கா முக்கிய பங்கை வகிக்கிறது.

இதில் எம்மவர்கள் சிலரும் மனிதவுரிமை சபையில் இருந்து தீர்ப்பு வரும் என்று கனவை மக்களுக்கு ஊட்டி எமது மக்களையும் அதட்குள் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார்கள்.

இதட்காக ஜெனீவா என்ற மனிதவுரிமை சபை, அந்த தளம் பிழை என்றோ தேவை இல்லை என்றோ சொல்லவில்லை.

முள்ளி வாய்க்கால் இனஅழிப்பு போர் முடிவுற்ற சூழலில் ஜூன் 2009 மனிதவுரிமை சபை கூட்ட தொடரில் மனிதவுரிமையை மதிக்கும் சில நாடுகள் கொண்டு வந்த பிராரணையை, அதில் அங்கம் வகித்த 41 நாடுகளில்  இந்திய போன்ற  நாடுகள் “சிறி லங்கா அரசு பயங்கரவாதத்தை வென்று விட்டது” என்று வாழ்ந்து கூறும் பிரேரணையாக மாற்றப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை எவ்வாறான தீர்மானங்களை எடுத்தாலும், இந்த சபையை நாடுகள் தான் இயக்கி கொண்டு இருக்கிறது. தீர்மானங்களும் ஜனநாயக வாக்கடுப்பு முறையிலேயே தீர்மானிக்கப்படுகிறது.

அதன் பின், ஒரு அரசு இவ்வாறு சட்டத்தை கையில் வைத்துக்கொண்டு ஒரு மாபெரும் படுகொலையை எவ்வாறு செய்ய முடியும் ?, இவை விசாரிக்கப்பட வேண்டும், இதட்க்காக சரியான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பல அரசு சார்பற்ற அமைப்புகள், தமிழர் சார் அமைப்புக்கள் தொடர்ச்சியான செயல்பாடுகளும், ஐக்கியநாடுகள் சபையின் சிறி லங்காவிட்டக்கான வதிவிட பிரதிநிதி திரு கோர்டன் வெயிஸ், 2010 யில் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, விட்ட அறிக்கையில், தான் பதவியில் இருக்கும் போது பல விடயங்களை கூற முடியாமல் செயல்பட முடியாமல் தடுக்கப்பட்டேன் என்று கூறியதோடு கடைசி போரில் 40,000 துக்கு மேலான மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை வெளிப்படுத்தினார்.

Mullivaikkal

அதன் பின் நடந்தது தான், 2011 யில் ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பன் கி மூன், 3 பேரை கொண்ட அதியுச்ச நிபுணர் குழு அமைத்து சாட்சியங்களை  உள் வாங்கி, சிறி லங்காவில் நடைபெற்ற படுகொலைகளை உறுதிப்படுத்தியதும், அதட்க்காக பிரான்சு மற்றும் சர்வதேச நாடெங்கும் சாட்சியங்களை நாம் அனைவரும் ஆவணங்கள் ஆக்கி அளித்ததும், இந்த செயல் திட்டத்தில் செயல்பட்டோர் மற்றும் சாட்சியங்களை அளித்த எல்லோருக்கும் தெரியும்.

அதன் பின் 2012 யில் ஐக்கியநாடுகள் பொது சபை இவற்றை ஆராய்ந்து ” ஐக்கியநாடுகள் சபை சிறி லங்காவில் மக்களை பாதுகாக்க தவறி விட்டது- இனிமேல் இவ்வாறு நடக்காமல் தாம் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற அறிக்கையை விட்டதும், அதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபையில் பல பிரேரணைகள் வந்ததும், 2014 ஆம் ஆண்டும் விசாரணை குழு அமைத்து சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டதும், இந்த சாட்சியங்கள் சேகரிப்புக்கு நாங்களும் பங்களித்ததும், எல்லோரும் அறிந்து இருப்பீர்கள்.

அதன் பின் செப்டம்பர் 2015 சிறி லங்காவில் நடைபெற்ற படைகொலைகளை வகைவேறாக விவரித்த ஒரு குற்றப்பத்திரிகையாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சபையின் உயர் ஸ்தானிகர் இளவரசர் ஸிய்டு யினால் முன்வைக்கப்பட்டது. இந்த குற்றங்களை, குற்றங்கள் நடைபெற்ற முறைகளை சர்வதேச குற்றங்கள் என்றும் அவை திட்டமிட்ட குற்றங்கள் என்றும் விவரிக்கப்பட்டது.

இந்த குற்றப்பத்திரிகை வருவதட்கு பல புலம் பெயர் கட்டமைப்புகள், புலம் பெயர்ந்து வந்த மக்களின் சாட்சியகளே – இந்த தளத்தை வலுப்படுத்தியதில் புலம் பெயர்கள் மக்களின் செயட்பாடுகள் மிக அதிகம் என்பதை முன்னாள் மனிதவுரிமை சபை உயர் ஸ்தானிகர் திருமதி நவநீதம்பிள்ளை அவர்கள் எம்மை நவம்பர் 2015 யில் சந்திக்கும் போது கூறினார்.

இதன் பின் கொண்டுவரப்பட்ட பிரேரணைகள் – மனிதவுரிமை சபை அல்லது ஐக்கியநாடுகள் சபைகள் குற்றங்களை விசாரித்து அறிக்கைகளை சமர்ப்பித்தாழும் அவற்றை நடைமுறை படுத்துவதட்கு பிரேரணையை வடிவமைத்து வாக்கடுப்புக்கு விட்டோ, இணக்கப்பாட்டுடனோ பிரேரணையை உருவாக்குவது நாடுகள், அதன் அடிப்படையில் மஹிந்த ஆட்சியில் இருக்கும் போது அமெரிக்காவின் தலைமையில் உருவான நாடுகள் உடனான குழு 2014 யில் உருவாக்கப்பட்ட பிரேரணையில் மனிதவுரிமை சபையின் தலைமையில் ஒரு விசாரணைக்குழு உருவாக்கப்பட்டு விசாரணைகளை மேட்கொள்ளுவார்கள் என்ற அடைப்படையில் அதட்கு சிறி லங்கா அரசு அடிபணியா சூழலில் மனிதவுரிமை சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, அந்த வாக்கெடுப்பின் அடிப்படையில் விசாரணை குழு உருவாக்கப்பட்டது.

இதன் பின் 2015 யில்  சிறி லிங்காவின் ஆட்சி மாற்றத்தின் பின், விசாரணை அறிக்கையின் படி நடைபெற்ற விவாதங்கள் பின் விசாரணை நடத்துவது பற்றிய விவாதம் எழுத்த போது அமெரிக்கா – பிரித்தானிய போன்ற நாடுகளின் தலைமையில் ஆனா குழு பிரேரணைக்கு எழுத்து வடிவம் கொடுக்கும் சூழலில் சிறி லங்கா அரசு மனிதவுரிமை சபையுடன் ஒத்துழைப்பது என்ற முடிவின் சூழலில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கிய Hyprid பொறிமுறையை ஏற்றுக்கொண்டு தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

UNHRC

இதில் இருந்து வல்லரசுகள் எவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இதில் நாம் மிக முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய  விடயம் – இதுவரை காலமும் வெளிவந்த மனிதவுரிமை சபை அறிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்ற கேள்விக்கு இந்த பிரேரணைகளில் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் – கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள் என்ற சொட்பதங்கள் தான் பாவிக்கப்பட்டது.

இதில் இருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது, சர்வதேசம் எம்மை தமிழ் மொழி பேசும் மக்களாகவோ, தமிழ் இனமாகவோ, சிறி லங்காவின் இனவெறி  அரசியலால் பாதிக்கப்பட்ட ஒரு  பூர்வீக குடி மக்களாகவோ கவனத்தில் கொள்ளாமல் தமிழர்களை சிறி லங்காவில் வாழும் சாதாரண மக்களாக பார்க்கின்றது என்றே கூறலாம்.

தமது நலனுக்காக, தமது புவியில் வல்லமையை உறுதி படுத்துவதட்க்காக, ஈழத்து தமிழரை, ஈழத் தமிழருக்காக செயல்படும் தமிழர் அமைப்புகளை மனிதவுரிமை சபை ஊடாக எமது மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என்ற அதி தீவிர நம்பிக்கையை  ஊட்டி எமது செயல்பாடுகளை முடக்கி வைத்திருக்கிறார்கள். தமிழ் மக்கள் ஜெனீவாவை மட்டும் மையமாக கொண்டு சிந்திக்கிறோம், ஜெனீவாவை நாம் அடியொற்றி நிட்கும் போது தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை வெறுமனே மனிதவுரிமை பிரச்சனையாக அவர்கள் சுருக்குகிறார்கள்.நிலைமாறு கால நீதி என்ற விடயத்தினால் மேலும் மக்களின் பிரச்சனையை சுருக்குகின்றார்கள். எமது விடயம் புது டெல்லியிலும் வாஷின்டோனிலும் தீர்மானிக்கப்படும் விடயமாகிறது.நாங்கள் ஆறு ஆண்டுகளாக எமது பிரச்சனைகளை மனிதவுரிமை பிரச்சனையாக வைத்திருக்கிறோம். எம்மை ஜெனீவாவுக்கு கட்டி வைத்தது  டெல்லி வாஷிங்டன் கொழும்பு ஆகியோரின் வெற்றியாகும். இப்போது சிறி லங்காவில் இருக்கும் அரசு மற்றும் பாராளுமன்ற பதவிகளில் இருக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் வாஷிங்டன், பிரித்தானியா மற்றும் இந்தியாவின் குழந்தைகள். இன்று ஆட்சியில் இருப்பவர்களை காப்பாற்றுவதில் தான் அவர்களை பிரசித்தவர்களாக இருக்கிறார்கள். அதட்கு துணையாக எமது அரச தலைவர்களும் இருக்கிறார்கள். தமது குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய அனைத்துலக சமூகம், (அனைத்துலக சமூகம் என்று உலகத்தில் அணைத்து நாடுகளும் அல்ல – இன்று உலகத்தை தமது வல்லமை ஊடாக வழிநடுத்துபவர்களை தான் சொல்கிறோம்), இவர்கள் எங்களுக்கான நீதியை நாங்கள் விரும்பும் அடர்த்தியில் பெற்று தர மாட்டார்கள்.

பலஸ்தீனர் இதே மனிதவுரிமை சபையில் செயல்படுகிறார்கள், தொடர்ச்சியாக தமது மக்களுக்கு நடைபெறும் மனிதவுரிமை மீறல்களை வலியுறுத்துகிறார்கள் ஆனால் பலஸ்தீனரை தங்களை ஒரு தேசிய இனமாக நினைத்து அதன் வழியில் ஐக்கியநாடுகள் பொதுச்சபையில்  செயல்பட்டு ஆரம்பத்தில் ஐக்கியநாடு பொதுச்சபையில்   பார்வையாளர் அங்கீகாரத்தை பெற்று இன்று அதே பொதுச்சபையில் நாடுகளின் வாக்குகள் ஊடாக பலஸ்தீன நாட்டின் அங்கீகாரத்தை பெற்று இருக்கிறார்கள், இதை தடுக்க வலுமை உடைய நாடுகள் எடுத்த முயட்சி கைகூட வில்லை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் வேட்டோ வாக்குரிமையை வைத்து பாலஸ்தீனத்தின் அங்கீகாரத்தை தடுக்க பல முயட்சிகளை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பலஸ்தீனரை இந்த ஜெனீவாவுக்குள் கட்டிவைத்திருக்க இந்த வலுமை உடைய நாடுகளால் முடியவில்லை , இதில் முக்கியமான விடயம் ஒன்றை பார்ப்போமானால் தமிழ் மக்கள் பிரச்சனையில் முன் நின்ற அதே நாடுகள் தான் பலஸ்தீனர் பிரச்னையில் இருந்தார்கள், இந்திய மட்டும் அதில் இருக்கவில்லை. அதையும் மீறி பாலஸ்தினர் முன்னெடுத்த செயல்பாட்டு முறைகள், அவர்களுக்கு கிடைத்த உலக மக்களின் பேராதரவு, உலகத்தில் இருக்கும் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவு  இன்று பலஸ்தீனக் கொடி ஐக்கியநாடுகள் சபை முன் பறக்கிறது.

இன்று எமது அரசியல் செயல்பாட்டுக்கு வேறுவடிவம் ஒன்றை கொடுக்கவேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்.

நாம் ஒரு தேசிய இனம் என்பதை முன்னிறுத்தி எமது செயல்வடிவங்களை மாற்ற வேண்டும்.

அதே நேரத்தில் மனிதவுரிமை சபையை – கைவிட்டுவிட்டு செல்வோம் என்று கூறவில்லை – இதுவரை நாம் செய்த செயல்படுகள், புலம்பெயர்ந்த்து வாழும் தமிழ் மக்கள் கொடுத்த சாட்சியங்கள், நடாத்திய போராட்டங்கள் யாவும் ஐக்கியநாடுகள் சபையின் செயலார்நாயகம் உருவாக்கிய சிறப்பு ஆய்வு குழுவினரின் அறிக்கை, அத்துடன்   மனிதவுரிமை சபையின் செப்டம்பர் 2015 அறிக்கை யாவும் சிறி லங்காவில் மக்களுக்கு எதிராக அரசு பாரிய குற்றத்தை செய்திருக்கிறது, அது திட்டமிட்ட குற்றம் என்றும் சர்வதேச குற்றங்கள் என்றும் கூறியிருக்கிறது.

இந்த சூழலில், சிறி லங்கா அரசால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்ற கேள்விக்கு, தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசிய இனம் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும்.

திம்பு உடன்பாட்டின் போது ஈழத்து தமிழரை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற சரத்து முதன்மை பெற்று இருந்தது.

தமிழர் பிரச்சனை ஒரு தேசிய இனப் பிரச்சனையாக கருதப்படவேண்டும். அந்த தேசிய இனத்துக்குரிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு உச்ச பட்ச தன்னாட்சி அதிகாரங்களை கேட்பவர்களாக இருக்க வேண்டும்.

self determination

இன்று உலகம் இருக்கும் சூழலில் உலகமயமாக்கலின் உச்சக்கட்டத்தில் சிறி லங்காவில் மாற்றங்கள் நடந்து கொண்டு இருக்கும் சூழலில் நாம் தேசிய இனம் என்ற நிலையில் உச்சபட்ச தன்னாட்சி கிடைப்பதட்க்கான வாய்ப்புகள் அருகிச்செல்கின்ற சூழலில் நாம் என்ன செய்யப்போகிறோம். எமது பேசும் சக்தி தாழ்ந்து கொண்டே போகின்றது. எப்படி ஒற்றையாட்சிக்கு வெளியே போகக்கூடிய தன்னாட்சியை பெறப்போகிறோம். அதட்காக பாராளுமன்றத்திட்கு வெளியே போராடும் வலு எமக்குண்டா? அந்த வலுவை நாம் எப்படி பெறப்போகிறோம்?

நாம் ஆழ்ந்து சந்திப்போமாக இருந்தால் தமிழர்களாக நாம் எமது வலுவை கட்டியெழுப்பவேண்டிய சூழலில் நிட்கிறோம். நாம் அரசற்ற மக்கள், நாம் இந்த உலகத்தை வேறு வடிவத்தில் அணுக வேண்டும்.

நாம் எமது மக்களின் கூட்டு காயங்களிலிருந்தும், கூட்டு மனவடுக்களிலிருந்தும் எமது பிரச்னையை இதுவரை காலமும் அணுகியே செயல்பட்டு வந்தோம். இவ்வாறு அணுகி பல ஆதரவு தளங்களை உருவாக்கி இருக்கிறோம், மனிதவுரிமை சபையில் திட்டமிட்ட படுகொலை என்று எழுத்தில் பதிவாகி பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் உடைய அறிக்கைகள் சாட்சியங்கள் இன்று இருக்கிறது. இதுவரை காலமும் சிறி லங்காவில் கொம்மிஷன்களில் பதியப்பட்டு தீர்வுகள் இல்லது இருந்தது இன்று சர்வதேச சபைக்கு இவை இன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

அடுத்து நாம் ஒரு தேசிய இனம் – தமிழர்கள் ஒரு தேசிய இனம்- அந்த தேசிய இனமாகிய நாம் அதை உறுதிப்படுத்தும் அணுகு முறையில் நகரவேண்டிய காலம் இன்று. அதட்கு நாம் எங்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசிய இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கும் செயல்திட்டங்கள் வடிவமைக்க பட வேண்டும்.

அதட்கு மக்கள் மையப்படுத்திய செயல்பாடுகள், ஊடாகவும், இராச்சிய செயல்பாடுகள் ஊடாகவும் தான் பெறலாம் என்று நாம் தீர்மானித்துக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு தேசிய இன வலியுறுத்தல் செயல்பாட்டில் தமிழர்களாக,  தமிழகம்,  தாயகம், மலையகம் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் சமூகமும் ஒன்றிணைந்த சிறகுகள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். தமிழ் சமூகத்தை ஒரு இராச்சிய செல்வாக்கு மிக்க சக்தியாக கட்டியெழுப்புவது என்ற முடிவை மேட்கொள்ளவேண்டும். அதன் ஊடாக சக்திவாய்ந்த தமிழ் சக்தியை உருவாக்க முடியும்.

ஏறத்தாள 3000 ஆண்டு காலத்திற்கு முற்பட்ட செழுமையான இலக்கிய, இலக்கண வளர்ச்சியுடைய மொழி தமிழ் ஒன்றே, இந்தியா -தமிழீழத்துக்கு வெளியே கடல் கடந்த பல நாடுகளிலும் தமிழர்கள் பரவி தமிழும் பரவி இருக்கிறது.

 உலகின் மூத்த மொழிகளில் லத்தீன் (75 B C ), அர்மேனியன் (450 B C ) கொரியன் (600 B C ) Herbruw  (1000 B C )சீனம் (1200 B C ) கிரேக்கம் ( 1450 B C )எகிப்தியம் (2600 B C ) சமஸ்கிரதம் (3000 B C ) மூத்த பெரு மொழியாக தமிழ் (5000 ) வருடங்களையும் கடந்து செழித்தோங்கி வளர்ந்து நிற்கின்றது.

அது மட்டுமன்று, இவற்றினும் பழமையான நாகரீகம் வளர்த்த பண்டைய மொழிகள் யாவும் அழிந்து இருந்த இடம் தெரியாமல் போய்விட, அழிந்து போய் இருந்த herbrew  மொழி இஸ்ரேலிய நாடு உருவாக்கம் பெற்றதனால் இன்று உயிர்பெற்று பேசும் மொழியாக இருக்கிறது.

பாபிலோனிய – மெசொபொடோமியா சுமேரிய நாகரீகங்கள் அழிந்து விட்ட நிலையில், சிந்து வெளி நாகரிகத்தில் உருவான தமிழர் நாகரீகம் ஒன்று தான் இன்று உயிர்ப்புடன் இருக்கும் நாகரீகம் ஆக இருக்கிறது.

தொல்காப்பியத்தில் தொடங்கிய மொழிக்காப்புணர்வு, சங்க இலக்கியங்களிலும் ஐம்பெருங்காப்பியங்களில் மொழிப் போற்றுதலாக வளர்ந்தது. சமய இலக்கியங்களில் தமிழ் மொழி முதன்மை படுத்திப் போற்றப் பெற்றது.

இன்று உலகம் மாறும் வேகத்தில் உலகத்தின் மூத்த மொழியாக கருதப்படும் தமிழ் மொழி – உலகத்தின் மூத்த குடிகளாக கருதப்படும் தமிழ் இனம் தமது மொழி அடையாளத்தைக் கலாச்சாரத்தை இழந்து கொண்டு போவதை கண் கூடாக காண்கிறோம்.

அதட்கு முக்கியமான காரணம் நாங்கள் எங்களை ஒரு தேசிய இனமாக இனம் காட்டி கொள்ளாததுதான்.

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களில் கிட்டத்தட்ட 8 கோடிக்கு மேல் தமிழ் நாட்டிலும் – இந்தியாவின் பல பகுதியில் வாழ்ந்தாலும் கிட்டத்தட்ட 4 கோடி தமிழ் மக்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள்.

காலனித்துவ காலத்தில் அடிமை ஒழிப்பின் பின் உலகெங்கும் பிஜி தீவு முதல் – new caledonia – vanuatu -mauritius – reunion தீவுகள் – தென் ஆப்பிரிக்கா – மேற்கு இந்திய தீவுகள் வரை கொத்தடிமைகளாக தமிழ் மக்கள் வேலைக்காக கொண்டு செல்லப்பட்டார்கள். இவர்களின் மக்கள் தொகை 2 கோடிக்கு மேல் இருக்கும். இன்று இவர்கள் தமிழ் மொழி பேசாதவர்களாக தமிழ் அடையாளங்களுடன் காத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மௌரிசியஸ் – ரெயினின் ( Reunion Islands ) தென் ஆபிரிக்க போன்ற நாடுகளில் இன்று தமிழ் மொழி காக்கும் இடங்களாக கோவில்கள் தான் இருக்கின்றன அதில் மௌரிசியஸ் நாட்டில் 70 வீதமான கோவில்களில் தமிழ் மொழியிலேயே பூஜைகள் நடைபெறுகின்றன ஆனால் தமிழ் மொழி பேசும் மக்களாக அவர்கள் இல்லை.

அதன் பின் தொழில் காரணமாக சென்றவர்களும் காலனித்துவ ஆட்சி காலத்தில் பர்மா- மலேசியா – சிங்கப்பூர் – இந்தோனேசியா பிரித்தானிய – அமெரிக்கா – கனடா போன்ற நாடுகளுக்கு சென்றவர்களும் இன்று  பர்மியராகவும் மலேசியார் சிங்கப்பூர் அமெரிக்கர் பிரித்தானியர் ஆகவும் பெரும் பகுதியினர் தமிழ் மொழியை மறந்தவர்களாக வாழ்கிறார்கள். மீதியாக இருக்கும் தமிழர்கள் தமிழ் மொழியை இன்னும் எத்தனை வருடங்கள் காத்துக்கொள்வார்கள் என்பது கேள்விக்குறி?

world-tamil-population_530cb4dd01d74_w1500

அதன் பிறகு இலங்கையில் இருந்து அங்கு வாழ முடியாமல் தமது பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறிய 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட தமிழர்கள்.

எல்லோரும் அவரவர் வாழும் நாடுகளில் ஐக்கியம் ஆகி விடும் சூழல் இன்று முன் நிற்கிறது.

இன்று நாங்கள் உலகத்தில் கிட்டத்தட்ட 12 கோடி தமிழர்கள் இருக்கிறோம் என்பது ஒரு கணிப்பீடு. உலகத்தில் மிகவும் பழமை வாய்ந்த எமது இனம் – உலகத்தில் பழமை வாய்ந்த மூத்த கலாச்சாரங்கள் அழிந்துள்ள நிலையில் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே கலாச்சாரம் தமிழர் கலாச்சாரம் – உலகத்தில் மொழிகளுக்கு எல்லாம் அடிப்படை மொழியாக இருக்கும் தமிழ் மொழி இன்னும் எத்தனை நூறு ஆண்டுகள் இந்த உலகமயமாக்கத்தில் தாக்கு பிடித்து நிற்கும் என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை இன்று முக்கியமாக பார்க்கிறோம்.

நாங்கள் ஒரு இனமாகவோ – பூர்வீக குடிகளாகவோ அங்கீகாரம் அற்ற மக்களாகவோ உலகத்தில் எம்மை பாதுகாத்துக்கொள்ள எந்த வித வழிவகைகள் – இன்றி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எமக்கு இன்று அடையாளம் அங்கீகாரம் தேவை – இல்லையேல் நாம் அழிந்து விடுவோம்.

உலகத்தில் உலக அங்கீகாரம் பெற்ற ஒரு இன மக்களுக்கு தான் அழிவில் இருந்து பாதுகாக்க அங்கீகாரங்கள் உண்டு. இன்று எம்மை ஒரு இனமாகவோ, பழமை வாய்ந்த பூர்வீக குடிகளாகவோ இன்றைய சர்வதேச நாயகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆகவே இன்றைய கால சூழலில் உலகத்தில் வாழும் தமிழர்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கூற வேண்டிய காலம் வந்திருக்கின்றது என்று நினைக்கின்றோம்.

யூத மக்கள்,  மொழி அழிந்து பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த போது தமது அழிவில் இருந்து தம்மை பாதுகாக்க zionism என்ற உலக அமைப்பு அமைக்கப்பட்டு தமது இன அடையாளத்தை பாதுகாக்க வழிவகைகளை செய்தார்கள். யூதர்கள் தம்மை ஒரு தேசிய இனமாக நினைத்து தாம் இழந்ததாக கூறும் அந்த நாட்டை அடைய, தமது மொழி, கலை, கலாச்சாரம், வாழ்க்கை முறை, சமயம் ஆகியவற்றை அடைய செய்த போராட்டமும், அவர்களுக்கு எதிராக ஐரோப்பாவில் நடைபெற்ற அழிவும், அவர்களுக்கு உரிய நாட்டை பெற்றுக்கொடுத்தது. இஸ்ரேல் என்ற நாடு உருவாவதட்க்கு புவியல் அரசியலும் ஒரு காரணமாக இருந்தாலும், அவர்களின் தொடர் முயட்சியும் இதட்கு காரணம்.

இன்று உலகத்தில் இருக்கும் அணைத்து தமிழர்களையும் தேசிய இனமாக சிந்திக்க வைக்கவேண்டிய தேவை எழுந்துள்ள சூழலில் உலகத்தில் பரந்து வாழும் தமிழர்கள் தங்களை ஒரு தேசிய இனமாக பல நாடுகளில் சிந்திக்க ஆரம்பித்துள்ள சூழலில், நாம் எல்லோரும்  தேசிய இனமாக சிந்திக்க ஆரம்பிக்கின்ற போது உள்நாட்டிலும், அயல்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலிருந்திலிருந்தும்இதை தடுக்க பல தடைகள் வரலாம், அவற்றை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் நாம் துணிந்து செயல்பட  கூடியவர்களாக சவால்களை எதிர்கொள்ள கூடியவர்களாக மாறவேண்டும்.

உலகத்தில் ஒரு பாரிய போராட்டத்தை முன்நகர்த்திய எங்காளல் இது முடியாது என்பது இல்லை. சிங்கள அரசுகள் இவற்றை எல்லாம் எதிர்கொள்வோம் என்று துணிந்து முடிவுகளை எடுத்த படியால் தான் இன்று அவர்கள்  தாம் நினைத்ததை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அதனால் நாம் ஒரு தமிழ் தேசிய இனமாக சிந்திப்போம் – ஒரு தேசிய இனத்துக்குரிய வடிவத்தை உருவாக்கி உலகத்தை வெல்வோம்.