செய்திகள்
நாளைய தனியார் பஸ் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரால் நாளை நடத்தபடவிருந்த சேவை நிறுத்த போராட்டம் நடைபெறாது என அந்த சங்கம் அறிவித்துள்ளது.
இன்று மாலை நிதி அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தமது கோரிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்துவதாக நிதி அமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளது.
வாகன போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறுவோர் மீது அறவிடப்படும் தண்டப்பணத்தை 2500ரூபா வரை அதிகரிக்கும் யோசனைக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது. -(3)




