செய்திகள்

நாளை கொழும்பின் விஷேட போக்குவரத்து முறை

இலங்கையின் 69வது சுதந்திர தினம் நாளை  கொண்டாடப்படவுள்ள நிலையில், கொழும்பில் நாளை விஷேட போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி சில வீதிகள் மூடப்படும் என்பதால் மாற்று வீதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி நாளை கொழும்பில் தற்காலிகமாக அமுல்படுத்தப்பட உள்ள போக்குவரத்து விபரம் வருமாறு,

04.02.2017 அன்று காலை 05.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை மூடப்படும் வீதிகள்

01) காலிவீதி, காலி முகத்திடல் சுற்றுவட்டம் தொடக்கம் பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரை

02) சைத்தன்ய வீதி

காலை 07.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணிவரை மூடப்படும் வீதிகள்

03) கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலி முகத்திடல் சுற்றுவட்டத்திற்குள் நுழையும் வீதி (குடியிருப்பாளர்களுக்கு இடமளிக்கப்படும்)

04) கொள்ளுப்பிட்டி புனித மைக்கல் சுற்றுவட்டத்தில் இருந்து காலி வீதிக்கு நுழையும் வீதி (குடியிருப்பாளர்களுக்கு இடமளிக்கப்படும்)

05) ரோடுன்டா சுற்றுவட்டத்தில் இருந்து காலி வீதிக்கு செல்லும் வீதி (குடியிருப்பாளர்களுக்கு இடமளிக்கப்படும்)

06) செரமிக் வீதியில் இருந்து (லோட்டஸ்ட் வீதி) பழைய பாராளுமன்ற வீதி வரை

07) யோர்க் வீதியில் இருந்து இலங்கை வங்கி மாவத்தை வரை (அலுவலக பணியாளர்களுக்கு இடமளிக்கப்படும்)

08) சீனோர் சந்தியில் இருந்து (கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால்) C.T.O சந்திக்கு உள்நுழையும் பாதை (அலுவலக பணியாளர்களுக்கு இடமளிக்கப்படும்)

09) கோட்டை C.T.O சந்தியில் இருந்து செரமிக் சந்தி வரையான வீதி (அலுவலக பணியாளர்களுக்கு இடமளிக்கப்படும்)

10) மாகன் மாகர் மாவத்தை, உத்தரானந்த மாவத்தை சந்தியில் இருந்து காலி முகத்திடல் சுற்றுவட்டத்திற்கு செல்லும் வீதி (அலுவலக பணியாளர்களுக்கு இடமளிக்கப்படும்)

காலை 08.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மூடப்படும் வீதிகள்

11) காமினி சுற்றுவட்டத்தில் இருந்து டீ.ஆர். விஜேவர்த்தன மாவத்தைக்கு உட்செல்லும் வீதி (அலுவலக பணியாளர்களுக்கு இடமளிக்கப்படும்)

12) கொம்பனிவீதி பொலிஸ் சுற்றுவட்டத்தில் இருந்து ரீகல் சந்திவரை

காலி வீதியினூடாக கொழும்பிற்கு உள்நுழையும் மற்றும் வெளிச்செல்லும் கனரக வானங்கள்,

– டப்ளியூ. ஏ. சில்வா மாவத்தையினூடாக பழைய ஹெவ்லக் வீதி, மாயா சுற்றுவட்டம், ஹெவ்லக் வீதி, திம்பிரிகஸ்யாய வீதி, பேஸ்லைன் வீதி ஊடாக கொழும்பிற்கு வர முடியும்.

– காலி வீதியினூடாக கொழும்பிலிருந்து வெளிச்செல்லும் னரக வானங்கள் இந்த வீதியினூடாக சென்று காலி வீதியை அடைய முடியும்.

காலி வீதியினூடாக கொழும்பிற்கு உள்நுழையும் மற்றும் வெளிச்செல்லும் பஸ்கள் மற்றும் இலகுரக வானங்கள்,

– காலி வீதியினூடாக பகதலே வீதி, ஆர்.ஏ.டி.மெல் மாவத்தை, பௌத்தாலோக மாவத்தை, தும்முல்ல சுற்றுவட்டம், தர்ஸ்டன் வீதி, ஜே.ஓ.சி சந்தி, கிளாஸ் ஹவுஸ் சந்தி, நந்தா மோட்டர்ஸ், ஹோர்டன் சுற்றுவட்டம், சொய்சா சுற்றுவட்டம், டீன்ஸ் வீதி, டெக்னிகல் சந்தி ஊடாக பயணிக்கலாம்.

– காலை 09.00 முதல் கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து பித்தளை சந்தி, கொம்னி வீதி ஊடாக பயணிக்க முடியும்.

– ஒல்கட் மாவத்தை, டெக்னிகல் சந்தி, மருதானை சந்தி, டீ.பி.ஜாயா மாவத்தை, இப்பன்வல சந்தி, யூனியன் பிளேஸ், லிப்டன் சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, எப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை, கண்ணங்கர மாவத்தை, நந்தா மோட்டர்ஸ் சந்தி, சுதந்திர சதுக்க சுற்றுவட்டம், ரீட் மாவத்தை, தும்முல்ல சுற்றுவட்டம், பௌத்தாலோக மாவத்தை, ஆர்.ஏ.டி.மெல். மாவத்தை, காலி வீதியூடாக வெளிச்செல்ல முடியும்.

n10