செய்திகள்

நிதிநிறுவனங்கள் அதிகூடிய வட்டிக்கு பணத்தினை வழங்கி மக்களை கடன்சுமைக்குள் தள்ளிவருகிறது

நூற்றுக்கு மேற்பட்ட நிதிநிறுவனங்கள் அதிகூடிய வட்டிக்கு பணத்தினை வழங்கி மக்களை கடன்சுமைக்குள் தள்ளிவருவதாக மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஐந்தாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வு மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகில் ஐந்தாவது ஆண்டு நினைவு கேக்வெட்டப்பட்டு பலூன்கள் பறக்கவிடப்பட்டது.

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர் கே.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளா வி.தவராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் எஸ்.சந்தானம்,மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி யு.ஜே.ஹெட்டியாராட்சி மற்றும் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள்,வங்கி முகாமையாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது காந்தி பூங்கா அருகில் இருந்து கலாசார நிகழ்வுகளுடன் நடைபவனியும் நடைபெற்றதுடன் நடைபவனியானது வங்கியினை அடைந்ததும் அங்கு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது பெண்களுக்கான விசேட வைப்புகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் சுயதொழில் கடன்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர்,

குடும்பங்களில் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கு இவ்வாறான வங்கிகள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை பாராட்டுகின்றேன்.இவ்வாறான சிறந்த திட்டங்களுக்கு பிரதேச செயலகம் என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

n10

IMG_0162