செய்திகள்
நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்ல பிரேரணை?
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்ல பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்த எதிர்கட்சி தீர்மானித்துள்ளது.
இதன்படி குறித்த பிரேரணையில் எம்.பிக்களின் கையொப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக எம்.பிக்களின் கையொப்பங்களை பெற்றுக்கொண்ட பின்னர் அதனை அடுத்த வாரமளவில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பிரதமரால் வரி திருத்தம் செய்யப்பட்டதை அடிப்படையாக கொண்டே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.
எவ்வாறாயினும் இதற்கு முதலும் கடந்த வருடத்தில் ரவிகருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முயற்சித்த போதும் அது தோல்வியில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
n10




