செய்திகள்

நிமலராஜனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு: ஊடக அடக்குமுறைக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம்

படுகொலை செய்யப்பட்ட நிமலராஜனின் 16 ஆவது ஆண்டு நினைவு நாளான நேற்று வடக்கு, கிழக்கு,தெற்கு ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்தினர்.

யாழ். நீதிமன்றத் கட்டடத் தொகுதிக்கு அருகிலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக கட்டப்பட்ட நினைவுத் தூபியில் நிமலராஜனின் உருவப் படம் வைக்கப்பட்டு மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தியேற்றி உணர்வுபூர்வமாக மலரஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி ஆர்ப்பாட்டமும் செய்தனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய மக்கள்முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதன் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

00

14639588_10157576411855324_5898153984725979540_n 14642019_10157576412365324_6565508866649152339_n 14702231_10157576412165324_3726063700495714680_n 14708368_1078183122280996_5786423308544542258_n 14718845_10157576409485324_6983808856499054959_n 14721690_10157576409155324_5057487868294602989_n:06