செய்திகள்

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : சுனாமியும் உருவானது

நியுஸிலாந்தின் தெற்கு தீவில் இன்று ஞாயிற்றுக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து கடற்கோள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிறைஸ்ட்சர்ச்சில் இருந்து சுமார் 95 கி.மீ தொலைவில் 7.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, இரு மணி நேரங்கள் கழித்து வட-கிழக்கு கடற்கரையை சுனாமி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முதல் அலைகள் பெரியதாக இருக்க வாய்ப்பில்லை என்றும், பல மணி நேரங்களுக்கு சுனாமி தாக்கம் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் கடற்கரைக்கு அப்பால் செல்லுமாறும் அல்லது உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் -(3)_92421561_02.623004214 _92421767_05.623004214