நிறைவடைகின்ற 23 உள்ளூராட்சி மன்றங்களின் காலம் மேலும் நீடிக்கப்படமாட்டாது
இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்ற 23 உள்ளூராட்சி மன்றங்களின் காலம் மேலும் நீடிக்கப்படமாட்டாது என்று உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த உள்ளூராட்சி மன்றங்களின் காலம் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆறுமாதங்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தது.
அதன்படி குறித்த 23 உள்ளூராட்சி மன்றங்களினதும் உத்தியோகபூர்வ காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.
இவற்றுள் 05 பிரதேச சபைகள், ஒரு நகர சபை மற்றும் 17 மாநகர சபைகளும் உள்ளடங்குகின்றன.
முன்னதாக, உள்ளூராட்சி மன்றங்களின் காலத்தை நீடிக்கவோ அல்லது முடிவுறுத்தவோ தனக்கு அதிகாரம் இருந்த போதிலும், இரு பிரதான கட்சிகள் இணைந்துள்ள தேசிய அரசாங்கம் இதுவென்பதால் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்தே தீர்மானம் எடுக்கப்படும் என்று அமைச்சர் பைசர் முஸ்தபா கூறியிருந்தார்.
n10
n10




