செய்திகள்

நிலுவை வேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளோம் : தொண்டமான்

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பின் நிலுவை கொடுப்பனவு கிடைக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டிலிருந்தே நாங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் இதன்படி நிலுவையை பெற்றுக்கொடுப்பதற்காக மாற்று வழியை தேடிக்கொண்டிருப்பதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆனால் நிலுவை கொடுப்பனவு வழங்கப்படாது என்றே கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)