நில்வளா கங்கையில் நீராடிய நால்வரை காணவில்லை!
அக்குரஸ்ஸ – உடஹா எல்ல பகுதியில் நில்வளா கங்கையில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
இன்று மாலை இவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிதிகம பகுதியிலுள்ள நிறுவனமொன்றில் பணியாற்றும் இவர்கள் குறித்தப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் கங்கையில் நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
12 பேர் கொண்ட குழுவினர் அந்தப் பகுதிக்கு சென்றிருந்ததுடன், இவர்கள் மதுபானம் அருந்தியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீரில் மூழ்கி காணாமல் போனவர்களை தேடி பொலிஸாரும், பொதுமக்களும் தேடுதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.
-(3)




