செய்திகள்
நிழல் அமைச்சரவைக்கு அரசாங்கம் அஞ்சுகிறதா : நாமல் கேள்வி
தாம் அமைத்துள்ளது நிழல் அமைச்சரவை அல்லவெனவும் அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்கானிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவே எனவும் ஆனால் அரசாங்கமே இது நிழல் அமைச்சரவை என கூறி பயந்துக்கொண்டிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று கேகாலை நகரில் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டிருந்த அவரிடம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் அமைக்கப்பட்டுள்ள நிழல் அமைச்சரவை தொடர்பாக ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”இது நிழல் அமைச்சரவை அல்ல அரசாங்கம் தான் அவ்வாறு கூறிக்கொண்டிருக்கின்றது. உண்மையில் ஒவ்வொரு அமைச்சின் நடவடிக்கைகளையும் கண்கானிக்கவென்று ஒவ்வொருவருக்கும் பொறுப்புக்கள் வழங்கப்பட்டது. இதனையே நிழல் அமைச்சரவை என கூறுகின்றனர். அரசாங்கம் இதனை பார்த்து பயந்து வி;;ட்டது. இதனால் இதனை அமைச்சரவையென கூறுகின்றனர்.”என அவர் தெரிவித்துள்ளார்.
n10




