செய்திகள்
நிஷாந்த ரணதுங்கவுக்காக போராட தயாராகும் அர்ஜுன ரணதுங்க
சீ.எஸ்.என் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள 5பேரில் ஒருவரான நிஷாந்த ரணதுங்கவின் விடுதலைக்காக தான் எப்போதும் முன்னிற்பேன் என அவரின் சகோதரரான அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.நிஷாந்த ரணதுங்கவின் கைது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள கருத்தொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”நிஷாந்த ரணதுங்க எனது சகோததர். நான் அவருக்காக முன்னிற்பேன். ஆனால் எனக்கு தெரியும் சட்டம் முறையாக செயற்பட வேண்டும் என்பதேயாகும். எவ்வாறாயினும் நான் இது பற்றி ஜனாதிபதியிடமோ , பிரதமரிடமோ இது வரை கதைக்கவில்லை. யாரேனும் நபர்களுடன் சேர்ந்து இருக்கும் போது என்ன நடக்கின்றதென தெரிந்திருக்க வேண்டும்.
இதற்கு இந்த சம்பவம் உதாரணமே. நிஷாந்த ரணதுங்க தவறு செய்திருக்க மாட்டார் என்றே நினைக்கின்றேன். ஆனால் நாட்டில் சட்டமென்ற ஒன்று உள்ளது. அதனை சரியாக செயற்படுத்தவே நாம் வந்துள்ளோம். இதனால் இந்த விடயத்தில் நான் சுயாதீனமாக செயற்படுவேன். இதன்படி எனது சகோதரனுக்காக எவ்வேளையிலும் நான் முன்னிற்பேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.




