செய்திகள்

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் விசாரணை இன்றி இருப்பவர்கள் எனக்கூறுவது தவறான விடயம்: சுமந்திரன்

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் விசாரணை இன்றி இருப்பவர்கள் எனக்கூறுவது தவறான விடயம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான இணையத்தள அறிமுகம் சிவில் சமூக பிரதிநிதிகளின் சந்திப்பும் யாழ்.மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் வெளிவிவகார அமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்றபோது நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் விசாரணை செய்யப்படவேண்டும் என்ற கருத்து சிவில் சமூக பிரதிநிதியால் முன்வைக்கப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சிறையில் இருப்பவர்கள் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படாமல் நீண்டகாலமாக இருப்பவர்கள் அதில் 11 பேரை தவிர மிகுயானவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

தற்போது சிறையில் இருப்பவர்கள் குற்றவாளிகளாக தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள்.குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்துகொண்டிருப்பவர்களும் குற்றம் சாட்டப்படாமல் சிறையில் இருப்பவர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்கள் அவர்களும் அண்மைக்காலங்களில்கைது செய்யப்பட்டவர்கள்.

மற்றவர்கள் ஏனையவர்களும் விடுதலை செய்யப்படவேண்டும் என்று தான் தாங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றோம் அதற்கானநடவடிக்கை தாமதமாகிக் கொண்டிருக்கிறது அது செய்யப்படவேண்டும்.

பலர் பல தருணங்களில் நீண்டகாலமாக குற்றஞ் சாட்டப்பட்டு இல்லாமல் நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள் என்று கூறுவதுதவறான தகவல் அதைத் திருத்திக்கொள்ளவேண்டும்

சிலருடைய வழக்குகள் 19 வருடங்களாக வழக்கு இழுபடுகின்ற வழக்காகக இருக்கின்றது எனத் தெரிவித்தார்.