செய்திகள்

நீதிமன்றம் எத்தகைய தீர்ப்பை வழங்கினாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம் : அனைத்து பல்கழை மாணவர் ஒன்றியம்

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியில் கற்கும் மாணவர்களுக்கு மருத்துவ சபையில் பதிவு செய்யும் உரிமையுள்ளதாக உயர்நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று மாலை மருதானையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மாலபே தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிரான தமது போராட்டம் தொடருமெனவும் தெரிவித்துள்ளனர். -(3)