செய்திகள்

நீதிமன்ற தீர்ப்பை ஆர்ப்பாட்டங்களால் மாற்ற முடியாது : அரசாங்கம்

சைற்றம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை மாணவர்கள் வீதிக்கு இறங்கி போராடுவதன் மூலம் மாற்றியமைக்க முடியாது என அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதேவேளை நீதிமன்ற தீர்ப்பையும் மீறி அண்மையில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே அவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் நடத்த நேரிட்டதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சைற்றம் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தனவினால் இன்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் வீதியில் இறங்கி போராடுவதால் சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை பாராளுமன்றத்தினால் கூட மாற்ற முடியாது. வேண்டுமென்றால் மாணவர்கள் மேன் முறையீடு செய்யலாம். இதேவேளை நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியமையினாலேயே மாணவர்கள் மீது தண்ணீர் தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)