செய்திகள்

நீதி நிலைநாட்டப்பட்டது: நீதிமன்றத்தில் குலுங்கி அழுத ஹிருணிகா

தனது தந்தை பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை சந்தேக நபர்களான முன்னாள் எம்.பி துமிந்த சிலா உட்பட நால்வருக்கு இன்று கொழும்பு நீதிமன்றத்தில் மரண தண்டனை அளிக்கப்பட தீர்ப்பின் பின்னர் கண்ணீர் மல்க செய்தியாளர்களை சந்தித்த ஹிருணிகா பிரேமச்சந்திர இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் சுதந்திரமான நீதி சேவையை ஏற்படுத்தியமையே இவ்வாறு நீதி நிலைநாட்டப்பட காரணம் என்று கூறிய அவர் தானும் தனது தயாரும் தனது தந்தையாரை நினைத்து அழாத எந்த இரவும் இல்லை என்று குறிப்பிட்ட அவர் இன்றும் அவர் தமது வீட்டில் வாழ்வதாகவே தாம் உணர்வதாக கூறினார்.

இந்த ஐவருக்கும் மரண தண்டனை அளிக்கப்பட்டமை குறித்து தான் மகிழ்ச்சி அடையவில்லை என்று குறிப்பிட்ட அவர், யாரும் துன்பத்தில் இருக்கும்போது அதுகுறித்து மகிழ்ச்சி கொள்ள தாம் ஒன்றும் மனிதாபிமானமற்றவர்கள் அல்ல என்றும் கூறினார்.

இதேபோன்று லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்நலிகொட, தஜாவுதீன் ஆகியோர் கொலைகல் தொடர்பிலும் நீதி நிலைநாட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.