நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்
நாட்டில் தற்போது நிலவும் கடும் வரட்சியான கால நிலை காரணமாக நீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இதன்படி தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினூடான குழாய் நீரை பெற்றுக்கொள்வோர் அத்தியாவசிய தேவைகள் அன்றி வேறு தேவைகளுக்கு நீரை பயன்படுத்துவதையும் நீரை வீனடிப்பதையும் தவிர்த்துக்கொள்ளுமாறும் அந்த சபை தெரிவித்துள்ளது.
வரட்சியான கால நிலை இன்னும் சில வாரங்களுக்கு நிலவும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)




