செய்திகள்
நீர் வழங்கல் சபை ஊழியர்கள் போராட்டத்தில் : நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையால் நீர் விநியோக நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகினன்றது.
கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து அவர்கள் இன்று காலை முதல் மேலதிக நேர வேலையிலிருந்தும் , இரவு நேர கடமையிலிருந்தும் விலக தீர்மானித்துள்ள நிலையிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன்படி திடீர் நீர் விநியோக தடைகள் ஏற்பட்டால் அதனை சீர் செய்ய முடியாது போகலாம் என தெரிவிக்கப்படுகின்றது. -(3)




