நீலக் கொடிகளால் அலங்கரிக்கப்படும் யாழ்ப்பாணம்
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 வருட பூர்த்தியை முன்னிட்டு யாழ் நகரம் நீலக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ் மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் இதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்து வருகின்றார்.

இதன் முதல் அங்கமாக யாழ் குடாநாட்டின் முக்கிய வீதிகள் யாவும் நீலவர்ண கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றமையினை காணக்கூடியதாக இருக்கின்றது.
இம்முறை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65வது ஆண்டு நிறைவு விழாவானது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் குருணாகலில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)




