நுவன்குலசேகர கைதாகி பிணையில் விடுதலை
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் நுவன்குலசேகர வாகன விபத்தொன்று தொடர்பாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை கிரில்லவல பகுதியில் அவரின் காரில் மோதுண்டு 28 வயது இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவத்தையடுத்தே அவர் கைது செய்யப்பட்டிருந்தார். எவ்வாறாயினும் அவரின் காருக்கு முன்னால் மோட்டார் சைக்கிளிலில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் மதிலொன்றில் மோதியதால் அவர் அதிலிருந்து வீசப்பட்டு வீதியில் விழுந்துள்ளதுடன் இதன்போது பின்னால் வந்த குலசேகரவின் கார் அவர் மீது ஏறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக குலசேகர கைது செய்யப்பட்டு பின்னர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். -(3)




