நுவரெலியாவில் பல்வேறு பகுதிகளில் துகள் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை
நுவரெலியாவில் பல்வேறு பகுதிகளில் துகள் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.அண்மைக்காலமாக நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இலங்கையில் நிலவும் மாறுபட்ட காலநிலை மாற்றம் அவர்களை மிகவும் கவர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மலையகத்தில் கடும் குளிரான காலநிலையும் ஏனைய பகுதிகளிலும் கடும் உஷ்ணமான காலநிலையும் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் காலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தில் பனிமூட்டமான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியாவில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை மிக குறைந்து கடும் குளிரான காலநிலை நிலவுகிறது.மேலும் நுவரெலியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் நத்தார் காலம் முதல் பூக்கள் பூத்து குலுங்குவதுடன் பனிப்பொழிவும் அதிகமாக காணப்படும்.இதை ரசிப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)







