செய்திகள்

நுவரெலியாவில் பஸ் விபத்து……

நுவரெலியா வெலிமடை பிரதான வீதியில் நுவரெலியா பொல்காவங்குவ சந்தியில் 04.03.2016 அன்று மாலை 4.30 மணியளவில் தனியார் பஸ் ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்ததில் நான்கு பேர் படுங்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

வெலிமடை பொரலந்த பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

படுங்காயங்களுக்குள்ளான நான்கு பேர் பஸ்ஸில் பயணித்த ஏனையவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

 

குறித்த பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

N5

 

 

 

SAMSUNG CAMERA PICTURES

SAMSUNG CAMERA PICTURES