நுவரெலியாவில் மரக்கறி தோட்டத்தில் தரையிரங்கிய ஹெலிக்கப்டர்
அமைச்சர்களான சஜித் பிரேமதாச , நவீன் திஸாநாயக்க உள்ளிட்டோர் பயணித்த ஹெலிக்கப்டர் நுவரெலியாவில் மரக்கறி தோட்டமொன்றில் தரையிரக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்துக்கொள்வதற்காக அமைச்சர்கள் அந்த ஹெலிக்கப்டரில் பயணித்துள்ளதுடன் அது நுவரெலியா நகரசபை மைதனத்தில் தரையிரக்க திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும் அங்கு நிலவிய கடும் பனி மூட்டம் காரணமாக அங்கு தரையிறக்க முடியாது போக விமானி அதனை சீதாஎலிய பகுதியிலுள்ள உதய குமார் என்பவரின் தோட்டத்தில் தரையிரக்கியுள்ளார்.
இதன்பின்னர் அங்கிருந்து பொலிஸாரின் உதவியுடன் அமைச்சர்கள் நிகழ்வுக்கு அழைத்துச் செல்லலப்பட்டுள்ளனர். -(3)




