செய்திகள்

நுவரெலியா குதிரை பந்தய திடலில் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் குதிரைப் பந்தய போட்டிகள் (படங்கள்)

நுவரெலியாவில் கலை, கலாசார, விளையாட்டு, களியாட்ட நிகழ்வுள் தினந்தோறும் தற்போது நடைபெற்று வருகின்றன.

இது குறித்து மாநகர முதல்வர் மஹிந்த தொடம்பெகமகே கூறுகையில் கடந்த வருடங்களை விட இவ்வருடம் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருவதாவும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் பாதுகாப்புகளையும் பெற்றுக்கொடுத்திருப்பதாக அவா் தெரிவித்தார்.

இதன் போது 15.04.2015 அன்று நுவரெலியா குதிரை பந்தய திடலில் குதிரைப் பந்தய போட்டிகள் நடைபெற்றன.

அத்தோடு குதிரை பந்தய திடலை சுற்றியுள்ள பிரதான பாதையில் மோட்டார் காரோட்டப் போட்டியும், நுவரெலியா மாநகர சபை பொது விளையாட்டு மைதானத்தில் கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிரிக்கெட் உட்பட பல போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

Horse (1)

Horse (3)

Horse (4)

Horse (5)

Horse (6)