செய்திகள்

‘நூற்றாண்டின் விளையாட்டுவீரன் ‘ அதிபார குத்துச்சண்டை சாம்பியன் முஹம்மது அலி காலமானார்

உலகின் முன்னாள் அதிபார குத்துச்சண்டை சாம்பியன் முஹம்மது அலி 74 ஆவது வயதில் அமெரிக்காவின் அரிசோனாவில் மரணமடைந்தார்.

உலகின் மிகவும் அறியப்பட்ட விளையட்டுவீரர்களில் ஒருவரானஅலி பார்க்கின்சோன் காரணமாக ஏற்ப்பட்ட சுவாசக் கோளாறு காரணமாக வியாழனன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணம் அடைந்துள்ளதாக அவரது பேச்சாளர் இன்று அறிவித்தார்.

1960 ஆம் ஆண்டு றோம் ஒலிம்பிக்ஸில் தங்கப்பதக்கம் பெற்று உலகின் கவனத்தை ஈர்த்த அலி பின்னர் 1964 இல் தனது முதலாவது உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். அதன்பின்னர் ஏராளமான பட்டங்களை வென்ற இவர் 1981 இல் இளைப்பாறும் வரை 61 போட்டிகளில் 56 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

[youtube url=” https://www.youtube.com/watch?v=C_fEIVwjrew” width=”500″ height=”300″]

‘ நூற்றாண்டின் விளையாட்டுவீரன் ‘ ‘ நூற்றாண்டின் விளையாட்டு ஆளுமை’ என்று ஊடகங்களால் விபரிக்கப்பட்ட அலி சிவில் உரிமைகள் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி இருந்ததுடன் சிறந்த கவிஞராகவும் பெயர் பெற்றுள்ளார்.

_77556059_000111806-1