செய்திகள்

நெடுங்கேணியில் குடும்பத்தகராறு காரணமாக கத்திக்குத்து; இளைஞன் மரணம், பெண்கள் உட்பட நால்வர் காயம்

வவுனியா, நெடுங்கேணி, ஊஞ்சல் கட்டிப் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட கத்திக்குத்தில் இளைஞன் ஒருவன் மரணடைந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா, நெடுங்கேணி, ஊஞ்சல்கட்டிப் பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை அருகருகே வசிக்கும் உறவினர்களிடையே ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி கத்திக் குத்தில் முடிவடைந்துள்ளது. வீடு ஒன்றில் ஏற்பட்ட இக் கைகலப்புச் சம்பவத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி அப்பகுதியைச் சேர்ந்த பழனியாண்டி ஜெயசீலன் (வயது 28) என்ற இளைஞன் மரணமடைந்துள்ளதுடன், இரு பெண்கள் உட்பட நால்வர் காயமடைந்து நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்ட தடிகள், வெற்றுப் போத்தல்கள், கத்தி என்பன பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரும் காயமடைந்த நிலையில் உள்ளதால் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவம் புளியங்குளம் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு வருகை தந்த வவுனியா மாவட்ட நீதிபதி லெனின்pகுமார் சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் மரணமடைந்தவரின் சடலம் என்பவற்றையும் பார்வையிட்டு பிரதே பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

IMG_5054

IMG_5013

N5