செய்திகள்

நெடுங்கேணி வைத்தியசாலையில் அம்புலன்ஸ் இல்லை: அவசர நோயாளர் அவதி

வவுனியா, நெடுங்கேணி வைத்தியசாலையில் நிரந்தர அம்புலன்ஸ் வண்டி இல்லாமையால் அப்பகுதி அவசர நோயாளர்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

வவுனியா, நெடுங்கேணி வைத்தியசாலையில் சேவையில் ஈடுபட்ட அம்புலன்ஸ் வண்டி கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் புளியங்குளம் வைத்தியசாலையில் உள்ள அம்புலன்ஸ் வண்டியே நெடுங்கேணி அவசர நோயாளர்களையும் ஏற்ற வேண்டியுள்ளது.

புளியங்குளம் வைத்தியசாலையில் உள்ள அம்புலன்ஸ் வண்டியே நவ்வி, ஓமந்தை ஆகிய வைத்தியசாலைக்கு வரும் அவசர நோயாளர்களையும் ஏற்றுவதால் நெடுங்கேணி வைத்தியசாலைக்கு அவசர நேதாயாளர்கள் வருகின்ற போது உடனடியாக இவ் அம்புலன்ஸ் வண்டி வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

N5