செய்திகள்

நெடுந்தீவு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்!

யாழ் நெடுந்தீவு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு; மிக அவதானம் | Important Announcement People Of Neduntheevuயாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்போக்குவாரத்து பாதிக்கப்பட்டுள்ளமையால் நெடுந்தீவு மக்களை மிக அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது.

சீரற்ற காலநிலையால் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல் வழியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயளர்களை இடமாற்றீடு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது.

எனவே நெடுந்தீவு மக்கள் அனைவரையும் விபத்துக்கள், பாம்பு கடி உள்ளிட்ட தவிர்க்க கூடிய நோய் நிலைகளை குறைத்து வீடுகளில் அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடற் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு வைத்திய அதிகாரியினால் நோயாளிகளை யாழ்ப்பாணத்திற்கு மேலதிக சிகிச்சைக்காக வான் வழியாக அனுப்பி வைக்க விமான படையினர் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது